உக்ரைன் போரால் பிரான்சில் முக்கிய உணவுப்பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு: மாற்று ஏற்பாடு அறிவிப்பு
உக்ரைன் போர் காரணமாக பிரான்சில் சூரியகாந்தி எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, எண்ணெயில் பொரிக்கப்படும் அன்றாட உணவுப்பொருட்களான மொறு மொறு சிப்ஸ், சாஸ் முதலான உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முறையை மாற்ற உள்ளன பிரான்ஸ் உணவு தயாரிப்பு நிறுவனங்கள்.
சூரியகாந்தி எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்த உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிரான்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக இனி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பாமாயில், rapeseed எண்ணெய், அல்லது soya lecithin ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆறு மாதங்களுக்கு இந்த மாற்றம் குறித்து உணவுப்பொருட்களின் உறைகள் மீது எந்த அறிவிப்பும் செய்யப்படவேண்டியதில்லை.
அதே நேரத்தில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உணவுப்பொருள் தயாரிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து உணவுப்பொருட்களின் உறைகள் மீது குறிப்பிடவேண்டும்.
அத்துடன், ஆறு மாதங்களுக்குப் பின், உணவுப்பொருட்களின் உறைகள் மீது, உணவில் என்ன எண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.