பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு ஜேர்மனியில் தட்டுப்பாடு: தகுதியுடைய வெளிநாட்டவர்களுக்கு ஒரு பயனுள்ள செய்தி
ஜேர்மனி, 2021ஆம் ஆண்டில் சுமார் 60,000 வெளிநாட்டவர்களுக்கு திறன்மிகு பணியாளர்களுக்கான விசா வழங்கியுள்ளது.
ஜேர்மனியின் திறன்மிகு பணியாளர்கள் புலம்பெயர்தல் சட்டத்தின் கீழ் இந்த விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஜேர்மன் திறன்மிகு பணியாளர்கள் புலம்பெயர்தல் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, 30,000 வெளிநாட்டவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன.
ஜேர்மனியில் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் அல்லது அதற்கு சமமான ஜேர்மனியால் அங்கீகரிக்கப்படும் தொழிற்பயிற்சியை வெளிநாடுகளில் முடித்தவர்களுக்கும், ஜேர்மன் பட்டப்படிப்புகளுக்கு இணையான உயர் கல்வியை வெளிநாடுகளில் பயின்றவர்களுக்கும் இந்த விசா வழங்கப்படுகிறது.
ஜேர்மனியில், பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைத் தொடர்ந்து, அந்த காலியிடங்களை நிரப்பும் முயற்சியில் ஜேர்மனி ஈடுபட்டுள்ளதால் தகுதியுடைய வெளிநாட்டவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.