மிக விரைவாக கொரோனா போன்ற மற்றொரு வைரஸ் தாக்கும்! அதை தடுக்க இவர்கள் தான் உதவ வேண்டும்: முன்னணி நோய் நிபுணர் எச்சரிக்கை
கொரோனா போன்ற மற்றொரு தொற்றுநோய் மிக விரைவாக தோன்றும் என அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசியரும், முன்னணி நோய் நிபுணருமான Sanjaya Senanayake எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா போன்ற மிக மோசமான மற்றொரு வைரஸ் மிக விரைவில் மீண்டும் தோன்றும் என Sanjaya Senanayake எச்சரித்துள்ளார்.
Canberra-வில் உள்ள தேசிய பத்திரிக்கையாளர் சங்கத்தில் பேட்டியளித்த Sanjaya Senanayake கூறியதாவது, கடந்த 50 ஆண்டுகளில் உலகில் 40 புதிய தொற்றுகள் தோன்றியது.
உலகளவிய மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, நாம் மேலும் மேலும் இயற்கையான வாழ்விடங்களைத் அழிக்கிறோம் மற்றும் காட்டு விலங்குகளுடன் தொடர்புகொள்கிறோம், உலகளவில் மக்களுக்கு இடையேயான தொடர்பு இப்போது இருப்பதைப் போல ஒருபோதும் சிறப்பாக இருந்ததில்லை.
எனவே, அடுத்த தொற்று நோய் 100 ஆண்டுகள் தொலைவில் இல்லை, மிக விரைவில் தோன்றும்.
கொரோனாவுக்கு பிறகு தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் மிகவும் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா தடுப்பூசி போடும் போது உலகளவில் கொரோனாவால் 1.6 மில்லியன் மக்கள் பலியாகிவிட்டனர்.
தடுப்பூசி மிக விரைவாக நமக்கு தேவைப்படுகிறது. தொற்றுநோய் தோன்றுவதற்கு முன்பே தடுப்பூசி தேவை.
இப்போது, இது ஒரு அபத்தமான கருத்தாகத் தெரியலாம், ஆனால் அதற்காக தான் தொற்றுநோய்க்கான ஆயத்த கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மாஸ்க் போன்ற சிறந்த அறிவாளிகள், அடுத்த தொற்றுநோய் எப்போது தோன்றும், அதை எப்படி தடுக்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பேராசியரும், முன்னணி நோய் நிபுணருமான Sanjaya Senanayake அழைப்பு விடுத்துள்ளார்.