லண்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட 35 வயது நபர்? வெளியான புகைப்படம்: பொலிசார் வைத்த முக்கிய கோரிக்கை
லண்டனில் பார்ட்டி நடந்த வீட்டிற்கு அருகில் 35 வயது மதிக்கத்தக்க நபர் சுடப்பட்டு இறந்து கிடந்த சம்பவத்தில் அவர் யார் என்பது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் சமீபகாலங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், தற்போது தெற்கு லண்டனில், 35 வயது மதிக்கத்தக்க நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து தற்போது பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், தெற்கு லண்டனின் Croydon-ல் இருக்கும் Birdhurst சாலையில் உள்ள ஒரு கார் பார்க்கிங்கில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஆண் ஒருவர் சுடப்பட்டு நிலையில் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பொலிசார் உடனடியாக விரைந்து சென்று பார்த்த போது, அந்த நபர் சம்பவ இடத்திலே இறந்துகிடந்தார். அதன் பின் பொலிசார் உடனடியாக உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து குறித்து பொலிசார் மேற்கொண்டுள்ள முதற்கட்ட விசாரணையில், அவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் பார்ட்டி நடந்துள்ளது. இதற்கு ஏராளமான விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு அமைதியாக நடந்த பார்ட்டி என்று பொலிசார் நம்புகின்றனர். எனவே, இந்த விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் பொலிசார் பேச விரும்புகின்றனர்.
நீங்கள் இது குறித்து பார்க்கவில்லை என்றாலும், அங்கு நீங்கள் இருந்திருந்தால், பொலிசாரை உடனடியாக தொடர்பு கொள்ளும் படியும், இது இந்த சம்பவத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் பெயர் Leroy Mitchell, இவரின் மரண செய்தியைக் கேட்டு அவரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுவரை யாரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.