பிரித்தானிய கடவுச்சீட்டு... சுட்டுக் கொல்வோம் என மிரட்டிய தாலிபான்: இளைஞர் அம்பலப்படுத்திய காபூல் பயங்கரம்
சர்வதேச சமூகத்தின் நெருக்கடி இல்லை என்றால் சுட்டுக் கொன்றிருப்போன் என பிரித்தானிய இளைஞரை தாலிபானகள் மிரட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற பிரித்தானிய இளைஞருக்கு தாலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 25 வயதான பிரித்தானிய மருத்துவ மாணவர், காபூல் விமான நிலையத்தில் நடக்கும் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் வெளியேற முயன்று வருகின்றனர்.
இதனால் காபூல் விமான நிலையத்தில் பெரும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பெண்கள், குழந்தைகள் என பாராமல் தாலிபான்கள் சாட்டையால் அடித்து துன்புறுத்துவதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய துருப்புகளால் அப்பாவி ஆப்கான் மக்கள் வெளியேற்ற முடியாமல் போனால், கண்டிப்பால அவர்களின் நிலைமை பரிதாபம் தான் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பிறந்த குறித்த இளைஞர் 2010ல் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்ததுடன், 2015ல் பிரித்தானிய குடியுரிமையும் பெற்றார். காபூல் விமான நிலையம் தற்போது அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதன் வெளியே திரண்டுள்ள அப்பாவி ஆப்கான் மக்களை தாலிபான்கள் மிரட்டியும், துப்பாக்கியான் வானத்தில் சுட்டு அச்சுறுத்தியும் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது பிரித்தானிய கடவுச்சீட்டை பரிசோதித்த தாலிபான்கள், சர்வதேச சமூகத்தின் நிர்பந்தம் இருப்பதால் மட்டும் தம்மை உயிருடன் விட்டுவிடுவதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு ஆப்கானிஸ்தானுக்கு சென்ற அந்த இளைஞர், தமது மனைவியுடன் தலிபான் சோதனைச் சாவடியில் எட்டு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு காபூல் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கான நான்காவது முயற்சியில் தப்பியுள்ளார்.
தற்போது இருவரும் தெற்கு லண்டனில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.