யூரோ கிண்ணம் கால்பந்து... இத்தாலி - அல்பேனியா போட்டியின் போது துப்பாக்கிச் சூடு
ஜேர்மனியில் நடக்கும் யூரோ கிண்ணம் கால்பந்து தொடரில், இத்தாலி மற்றும் அல்பேனியா போட்டியின் போது திடீரென்று துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் படுகாயங்களுடன்
குறித்த சமபவத்தில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், தாக்குதல்தாரியை பொலிசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெர்லின் மாவட்டமான மொவாபிட்டில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில், சப்மெஷின்களுடன் நூற்றுக்கணக்கான கலகத்தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரைத் தேடுவதாக கூறப்படுகிறது. இத்தாலி-அல்பேனியா போட்டியின் போது கால்பந்து ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலால் இந்த தாக்குதல் நடந்ததாக சிலர் கூறியுள்ளனர்.
ஆனால் இந்த தகவலானது உறுதி செய்யப்படவில்லை. மேலும், தாக்குதல்தாரியா அல்லது பாதிக்கப்பட்டவரா போட்டியை காண வந்தவர் என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.
கத்தியுடன் தாக்கிய நபர்
இந்த ஆட்டமானது 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை கால்பந்து ரசிகர்களை கத்தியுடன் தாக்கிய நபரை பொலிசார் சுட்டுக்கொன்ற விவகாரம் வெளிவந்த நிலையில், தற்போது துப்பாக்கி வெடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனிடையே, செர்பியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் யூரோ கிண்ணம் தொடக்க ஆட்டத்தில் சாத்தியமான கலவரம் குறித்து ஜேர்மன் காவல்துறை கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |