பிரான்ஸ் எல்லையில் பிரித்தானிய பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது தொடர்பில் தொடரும் குழப்பம்... பிரான்ஸ் விதிகள் என்ன சொல்கின்றன?
பிரெக்சிட்டைத் தொடர்ந்து, பிரான்சுக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்கள், எல்லை தாண்டும்போது தங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிடவேண்டுமா என்பது தொடர்பில் இன்னமும் குழப்பங்கள் நிலவும் நிலையில், அது குறித்த பிரான்ஸ் விதிகள் என்ன என்பதை இந்த செய்தியில் காணலாம்.
பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால், பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அவர்கள் எல்லையைக் கடப்பது இன்னமும் சிக்கலான ஒரு விடயமாகவே காணப்படுகிறது. பலர் தங்கள் பாஸ்போர்ட்களை எல்லையில் முத்திரையிடவேண்டியுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு சுற்றுலா அல்லது குறுகிய கால பயணம் மட்டும் மேற்கொள்வதற்காக வரும் பிரித்தானியர்கள், பிரான்சுக்குள் நுழையும்போதும், பிரான்சிலிருந்து வெளியேறும்பொதும் தங்கள் பாஸ்போர்ட்களை எல்லையில் முத்திரையிடுவது வழக்கமான நடைமுறை. அவர்கள் பிரான்சில் தங்கும் காலகாட்டத்தில் அவர்கள் எத்தனை நாட்கள் பிரான்சில் தங்குகிறார்கள் என்பதை ட்ராக் செய்வதற்கு பொலிசாருக்கு இது உதவும்.
ஆனால், பிரெஞ்சு வாழிட உரிமம் கொண்ட பிரித்தானியர்கள், பிரான்சுக்குள் வரும்போது தங்கள் வாழிட உரிமையை எல்லையில் உள்ள அதிகாரிகளுக்கு நிரூபிக்க இயலும் நிலையிலிருக்கவேண்டும். அதாவது, எல்லையில் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் கேட்கும்போது, பாஸ்போர்ட்டுடன் தங்கள் carte de séjour வாழிட அட்டையையும் அவர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.
அப்படி உங்களிடம் வாழிட அட்டை இல்லாதபோது, நீங்கள் 2020 டிசம்பர் 31க்கு முன் பிரான்சுக்கு குடிபெயர்ந்தவர்களாக இருந்து, வாழிட அட்டை கோரி விண்ணப்பித்திருப்பீர்களானால், நீங்கள் விண்ணப்பித்ததற்கான ரசீதைக் காட்டவேண்டும். 2020 டிசம்பர் 31க்குப் பின் பிரான்சுக்கு குடிபெயர்ந்தவர்களானால், உங்களிடம் விசா இருக்கவேண்டும்.
ஆக, பிரான்ஸ் விதிகளின்படி, 2021 ஜனவரி 1ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளதால், பிரெஞ்சு வாழிட உரிமம் கொண்ட பிரித்தானியர்களுக்கு எல்லையில் தங்கள் பாஸ்போர்ட் முத்திரையிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இது குறித்த மேலதிக விவரங்களுக்கு...
https://www.thelocal.fr/20211013/should-brits-living-in-france-have-passports-stamped-at-the-border/