இனிமே மலச்சிக்கல் பிரச்சனையே வராமல் இருக்க வேண்டுமா?அப்போ இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க
மலச்சிக்கல் என்பது பலர் அடிக்கடி அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என கூறப்படுகின்றது.
ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும். இதனை சரி செய்ய அடிக்கடி மாத்திரைகளை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
சில உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலோ, செரிமானம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது.
அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
- முழு தானியங்களில் மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை மற்றும் குமட்டல் போன்ற செரிமான அறிகுறிகளை குணப்படுத்தும். முக்கியமாக முழு தானியங்கள் குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.
- அன்றாடம் தயிரை ஒரு கப் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் எவ்வித செரிமான பிரச்சனையும் இருக்காது.
- இஞ்சியை ஒருவர் தினமும் ஒரு துண்டு பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். இஞ்சியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
- நீங்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான அமைப்பு சரியாக செயல்படும்.
- பப்பாளிபழம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை போன்ற அறிகுறிகளை குணப்படுத்துகிறது.
- வெள்ளரிக்காயில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளதால், இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
- தக்காளி வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் மேலும் தக்காளியில் மக்னீசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால், அன்றாட உணவில் தக்காளியை சேர்த்து வாருங்கள்.
- கிவி பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடல் செயல்பாடுகள் சிறப்பாகவும் சரியாகவும் நடைபெறும். எனவே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு, செரிமான செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- கேரட் இவை செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே இதை அடிக்கடி உங்கள் உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.