கொளுத்தும் வெயில்? வெயிலில் செல்ல வேண்டுமென்றால் இதை கவனத்தில் கொள்ளவும்
அதிகாலையில் சூரிய வெளிச்சத்தில் செல்வது சருமத்திற்கு மிகவும் உகந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதாவது காலை 7 மணி முதல் 9 மணி வரையிலுள்ள வெளிச்சமானது சருமத்தில் வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது.
ஆனால் நாம் அன்றாடம் செய்யும் சில குறிப்பிட்ட வேலைகளை காலம் நேரம் பார்க்காமல் செய்துதான் ஆக வேண்டும்.
அவ்வாறாக இருக்கும் போது ஒரு சில முன்னெச்சரிக்கையான விடயங்களை செய்வதன் மூலம் சரும பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம்.
தண்ணீர் அருந்துதல்..
நீங்கள் எங்கு வெளியில் சென்றாலும் கையில் தண்ணீர் போத்தல் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு வெயில் காலங்களில் மற்றும் வெயிலில் செல்லும்போது தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நீரிழப்பினை தடுப்பதோடு சருமத்தினையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
பழச்சாறுகள் அருந்துதல்..
தண்ணீர் மட்டுமல்லாது இளநீர், தர்பூசணி ஜூஸ், மோர் மற்றும் பாயாசம் போன்றவற்றினை அருந்தலாம்.
வெயில் தணிந்தபின் வேலை செய்தல்..
வெயிலில் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டும் குறிப்பிட்ட வேலையை செய்யவேண்டும் அவ்வாறு இல்லாவிடில் தண்ணீர் போத்தலை எப்போதும் எடுத்து செல்லுங்கள்.
காட்டன் ஆடை அணியுங்கள்..
வெயில் காலங்களில் இறுக்கமான ஆடைகளை அணியாமல் மெல்லியதான காட்டன் ஆடைகளை அணியுங்கள்.மிகவும் லேசான ஆடையை அணியுங்கள்.
அடர் நிற ஆடைகளை தவிருங்கள்..
காட்டன் ஆடைகளிலும் பளீர் நிற ஆடைகளை ஆடைகளை அணியுங்கள்.
அடர் நிற ஆடைகள் வெப்பத்தை உறிஞ்சுவதால் அதனை அணிவதை தவிருங்கள்.
மூடிய காலணிகளை தவிருங்கள்..
கால்கள் பெரும்பாலும் வெளியில் தெரியும்படியான காலணிகளை அணியவேண்டாம்.
சன் ஸ்க்ரீன்..
வெளியில் செல்லும் போது தரமான சன் ஸ்க்ரீனை பயன்படுத்துங்கள்.
அதிக மசாலா உணவுகளை தவிர்க்கவும்..
அதிகமான காரம் மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுப்பதால் அதிக ஆற்றல் விரயமாகும்.இதனால் இவ்வாறான உணவுகளை வெயில் காலத்தில் தவிர்ப்பது நல்லது.
குடை அல்லது கெப் எடுத்துக்கொள்ளுங்கள்..
வெயில் காலத்தில் வெளியில் செல்லும்போது குடை அல்லது கேப் அல்லது ஷோல் போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.
வெயிலிலிருந்து உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க உச்சி வெயிலில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.