தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா? இதோ சில அசத்தலான 5 டிப்ஸ்
Hair Tips
By Kishanthini
நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது.
ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் பலருக்கு முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்காது.
இதனை போக்க பலர் கண்ட கண்ட செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது முடிக்கு பாதிப்பினை தான் தரும்.
இதனை தவிர்த்து ஒரு சில இயற்கை பொருட்கள் கொண்டு முடியினை இயற்கைமுறையில் அழகாக்க முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து அடை தட்டி நிழலில் காயவைத்து அதை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து முடியில் தேய்த்து வந்தால் தலை முடி கறுப்பாக வளரும்.
- ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று தேக்கரண்டி தேயிலையைப் போட்டு காய்ச்சி தைலப்பதத்தில் இறக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி கருமையாகவும் செழித்தும் அடர்த்தியாகவும் வளரும்.
- இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
- கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
- நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US