பெற்றோர்கள் பிள்ளைகளை அடிக்கலாமா? குழந்தை சாராவின் மரணத்தைத் தொடர்ந்து கவனம் ஈர்த்துள்ள செய்தி
கடந்த ஆகத்து மாதம், சாரா என்னும் சிறுமி, தன் தந்தையும் சித்தியும் தாக்கியதால் உயிரிழந்தாள்.
அவளை சட்டப்படியே தண்டித்ததாகவும், ஆனால், அதிகம் அடித்ததாகவும் சாராவின் தந்தை கூறியிருக்கிறார்.
சாராவின் மரணத்தைத் தொடர்ந்து, குழந்தைகளை பெற்றோர் அடிப்பதை தடை செய்யக் கோரி பிரச்சாரங்கள் துவக்கப்பட்டன.
பெற்றோர்கள் பிள்ளைகளை அடிக்கலாமா?
ஆனால், இங்கிலாந்தில், பெற்றோர் பிள்ளைகளை தண்டிப்பதற்காக அடிப்பதை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என பிரித்தானிய அரசு கூறிவிட்டதால், குழந்தைகளை அடிப்பதற்கு எதிராக பிரச்சாரங்கள் துவக்கியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
லேபர் கட்சி, குழந்தையை அடிப்பதற்கு தடை விதிப்பதை ஆதரிப்பதாக முன்னர் கூறியிருந்தது.
அப்படி ஒரு தடை இங்கிலாந்தில் பிறப்பிக்கப்படுமானால், அதை நாடு முழுவதும் கொண்டு வர விரும்புவதாக 2022ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார் இப்போதைய பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர்.
இங்கிலாந்திலும் வட அயர்லாந்திலும், தவறு செய்யும் பிள்ளைகளை முறையாக தண்டிப்பதற்காக பிள்ளைகளை அடிக்க பெற்றோருக்கு அனுமதி உள்ளது.
என்றாலும், உடலில் காயம் ஏற்படும் அளவுக்கு அடிப்பதற்கு குழந்தைகள் சட்டம் 2004இன்படி தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |