இருமலை மூன்றே நாட்களில் குணமாக்க வேண்டுமா? இந்த கஷாயத்தை குடிங்க போதும்!
இருமலை முன்றே நாட்களில் விரட்ட கூடிய கஷாயம் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- துளசி இலை - 10
- மிளகு - 12
- சிற்றரத்தை - புளியங்கொட்டை அளவு
- எலுமிச்சைசாறு - 1 துளி
செய்முறை
மூன்றையும் எடுத்து அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி அல்லது சிறு உரலில் இட்டு இடித்து வைக்கவும்.
இதை ஒரு டம்ளர் நீரில் கலந்து சிறிய மண்சட்டியில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் அரை டம்ளராக்கி இறக்கி வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது வடிகட்டி எலுமிச்சைச்சாறு துளி சேர்த்து, தொண்டையில் வைத்து இதமாக வைத்து முழங்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் இனிப்புக்கு தேன் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
இருமல் வரும் போது காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் மூன்று நாள் குடித்துவந்தால் இருமல் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும். தொண்டை வலியும் இருக்காது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கால் டம்ளர் அளவு கொடுக்கலாம்.