கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இயற்கை வழியில் கரைக்க வேண்டுமா ?
ovarian
By Kishanthini
பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது.
ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) (pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
கருப்பை நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு முன், இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள்.
அந்தவகையில் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி நீர்க்கட்டிகளை குறைக்கும் ஒரு சில இயற்கை வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சுடுநீரை பாட்டிலில் நிரப்பி, அதனைக் கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலிக்கும் போது மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும்.
- ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்ட எண்ணெய் சேர்த்து கலந்து, உப்பு கரைந்த பின், உடலை அந்நீரில் 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் அகலும்.
- சீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், சீமைச்சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கும்.
- 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US