ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் வேண்டுமா வேண்டாமா? முடிவு செய்யப்போவது சுவிஸ் மக்கள்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய்ந்துவருகின்றன.
அவ்வகையில், சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பல ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது. ஆனால், அதற்கு சுவிட்சர்லாந்தில் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
முடிவு செய்யப்போவது சுவிஸ் மக்கள்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுவிட்சர்லாந்து செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் 1,800 பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஒரு ஒப்பந்தமாகும். ஆனால், அதற்கு சுவிஸ் மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் வேண்டுமா வேண்டாமா என்பதை சுவிஸ் மக்களிடமே விட்டுவிட அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த விடயம் தொடர்பான பிரேரணை மீது மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
ஆக, மக்கள் கருத்தைக் கேட்டு, அதன் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் வேண்டுமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |