மாதவிடாய் நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
மாதவிடாய் காலங்களிலும் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளலாம் என்று நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோதே இதனை தெரிவித்தார்.
சந்திப்பின் போது, மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசியவர், மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்னையும் ஏற்படவாய்ப்பில்லை.
மாதவிடாயை காரணமாகக் கூறி தடுப்பூசி போட்டுக்கொள்வதை தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை என்று விளக்கமளித்துள்ளார்.