உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாதா? இந்த 5 உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்
Food
Blood Pressure
By Kishanthini
பொதுவாக பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை முறை நோய்களில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம்.
இது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் அளவில் கொடியது.
ஏனெனில் ஒருவரது இரத்த அழுத்தம் வழக்கத்திற்கு அதிகமான அளவில் உயரும் போது, அதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து இதனை கட்டுப்படுத்துவது அவசியமாகும். அதற்கு ஒரு சில உணவுகள் உதவுகின்றன.
தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சினையை குறைக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
- உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் மாதுளையை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடுங்கள்.
- உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை சுருங்க வைக்கும். இதற்கு நாவல் பழத்தை சாப்பிடலாம். இதில் உள்ள பொட்டாசியம், தசைகளுக்கு மிகவும் நல்லது.
- ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் அல்லது சமைத்த ஒரு பீட்ரூட், அதை சாப்பிட்ட 2-3 மணிநேரத்தில் உயர் இரத்த அழுத்த அளவை கணிசமாக குறைக்கக்கூடியது.
- இரத்த அழுத்த நோயாளிகள் தங்களின் உணவில் பூண்டு சேர்த்து வந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று குறைக்கும் மற்றும் ஒருவர் ஆரம்பத்தில் இருந்தே தினமும் தங்களின் உணவில் பூண்டு சேர்த்து வந்தால், இரத்த அழுத்த பிரச்சனையே வராது.
- தினமும் உங்கள் உணவில் வெந்தயம் அல்லது வெந்தய கீரையை சேர்த்து வாருங்கள். இதனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US