காதலியை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் புதிய திருப்பம்! பொலிஸாருக்கு கிடைத்த ஷ்ரதாவின் பழைய புகார் கடிதம்

Police spokesman Delhi Crime Death
By Ragavan Nov 23, 2022 10:08 AM GMT
Report

இந்தியாவை உலுக்கிய ஷ்ரதா வாக்கர் கொலை சம்பவத்தில், புதிய திருப்பமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஷ்ரதா எழுதிய புகார் கடிதம் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

'என்னை துண்டு துண்டாக வெட்டுவதாக மிரட்டுகிறார்' என 2020-லேயே பொலிஸாருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார் ஷ்ரதா.

காவல் நிலையத்தில் புகார்

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொலை வழக்கில், காதலன் அஃப்தாப் பூனாவாலாவால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, உடலை துண்டு துண்டாக நறுக்கி, டெல்லியில் உள்ள காட்டில் வீசியதாகக் கூறப்படும் ஷ்ரத்தா வால்கர், சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள வசாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காதலியை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் புதிய திருப்பம்! பொலிஸாருக்கு கிடைத்த ஷ்ரதாவின் பழைய புகார் கடிதம் | Shraddha Walkar Murder 2020 Letter Aftab Threaten

ஷ்ரதாவின் புகார் கடிதத்தையும், அதற்கு வசாய் பொலிஸார் எடுத்த நடவடிக்கையையும் பொலிஸார் தற்போது சரிபார்த்து வருகின்றனர்.

அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் அஃப்தாப் அடித்த பிறகு, ஷ்ரதா பொலிஸிடம் புகாரை எழுதியுள்ளார், அதில் அஃப்தாபின் வன்முறை நடத்தை பற்றி அவரது குடும்பத்தினருக்குத் தெரியும் என்று தெவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு கடிதம்

ஆனால், ஷ்ரதா பின்னர் அவரது பெற்றோரிடம் பேசிய பிறகு "எங்களுக்கு இனி எந்த சண்டையும் இல்லை" என்று எழுத்துப்பூர்வமாக மற்றொரு கடிதத்தை அளித்ததாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கூறியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.

காதலியை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் புதிய திருப்பம்! பொலிஸாருக்கு கிடைத்த ஷ்ரதாவின் பழைய புகார் கடிதம் | Shraddha Walkar Murder 2020 Letter Aftab ThreatenIndiaTV

தற்போது இந்த வழக்கு தொடர்பில், ஷ்ரதாவுடன் வேலைபார்த்த கரண் என்ற நண்பரும், அஃப்தாபின் பெற்றோர்களும் டெல்லியில் வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடிதத்தில்

நவம்பர் 23, 2020 பதிவான அந்த புகார் கடிதத்தில் இருக்கும் தகவலும், அதே நேரத்தில் கரணிடம் வாட்ஸ்அப் மூலம் ஆஃப்தாப் தன்னை துன்புறுத்துவதாக சொன்னதும் ஒத்துப்போகிறது.

மேலும், ஷ்ரதா தனது காயப்பட்ட முகத்தின் புகைப்படத்தையும் கரணுடன் பகிர்ந்துள்ளார். அதையடுத்து ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் உள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதலியை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் புதிய திருப்பம்! பொலிஸாருக்கு கிடைத்த ஷ்ரதாவின் பழைய புகார் கடிதம் | Shraddha Walkar Murder 2020 Letter Aftab ThreatenFirstPost

"இன்று அவர் என்னை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார், அவர் என்னைப் பயமுறுத்துகிறார், என்னைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி எறிந்து விடுவார் என்று மிரட்டுகிறார், அவர் என்னை அடுக்கத்தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிறது, ஆனால் அவர் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுவார் என்பதால் எனக்கு பொலிஸிடம் செல்ல தைரியம்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

முரண்

ஆனால், புகார் கடித்ததில் ஆறு மாதங்களாக கொலை மிரட்டல் விடுத்து, பிளாக்மெயில் செய்ததாகக் கூறினாலும், 2019-ஆம் ஆண்டு உறவில் ஈடுபட்ட இருவரும், பிரிந்து செல்லவில்லை. கால் சென்டர் ஊழியர்களான இருவரும் இந்த ஆண்டு மே மாதம் டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட பிறகு, அவர்கள் எவ்வளவு காலம் பிரிந்து வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இமாச்சலப் பிரதேசத்திற்கு விடுமுறைக்காக ஒன்றாகச் சென்றுள்ளனர்.

வழக்கின் நிலை

இப்போதைக்கு கொலைக்கான ஆதாரமாக, அஃப்தாப் இதுவரை காவல்துறையிடம் கூறப்பட்ட வாக்குமூலம் மட்டுமே உள்ளது, ஆனால் அது மட்டுமே ஏற்றுக்கொள்ள படாது. எனவே மெஹ்ராலி காட்டில் கண்டெடுக்கப்பட்ட சில உடல் பாகங்கள் உண்மையில் ஷ்ரதாவுடையது தான் என்பதை உறுதிப்படுத்தும் தடயவியல் சோதனையின் மூலம், பொலிசார் பொருள் தடயங்களைத் தேடி வருகின்றனர். அதுவரை இந்த வழக்கு சிக்கலானதாகவே இருக்கும். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US