சிக்ஸர்களே இல்லாமல் சதம் விளாசிய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்…ரசிகர்கள் உற்சாகம்: வீடியோ காட்சிகள்
சிறப்பான ஆட்டத்தால் சதம் விளாசி அணியை வெற்றி பெற செய்த ஸ்ரேயாஸ் ஐயர்.
7 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட இஷான் கிஷான்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக சதம் விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்துள்ளார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் JSCA இன்டர்நேஷனல் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது, இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்கள் குவித்தது.
Excellent innings from @ShreyasIyer15 . Incredible century #shreyasiyer #INDvsSA pic.twitter.com/0WAcZBT7i9
— ஆன்மீக Shankar (@salemshankar) October 9, 2022
இரண்டாவது இன்னிங்ஸில் 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது, கேப்டன் ஷிகர் தவான் 13 ஓட்டங்களுடனும், சுப்மன் கில் 28 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஒன்றிணைந்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷான் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 93 ஓட்டங்கள் குவித்து இருக்கும் போது Fortuin வீசிய பந்தில் ஹென்ட்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.
ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் விளாசி 113 ஓட்டங்கள் குவித்துடன் மட்டுமல்லாமல் இஷான் தவறவிட்ட சதத்தையும் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இவற்றில் கவனிக்க தக்க விஷயம் என்னவென்றால், ஸ்ரேயாஸ் குவித்த 113 ஓட்டங்களில் ஒற்றை சிக்ஸர் கூட இடம் பெறவில்லை என்பது தான்.
Shreyas Iyer goes FOUR FOUR! ?#INDvSA #TeamIndia #ShreyasIyer pic.twitter.com/gdIMXH96i5
— CricTelegraph (@CricTelegraph) October 9, 2022
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் சதம் மற்றும் இஷான் கிஷானின் அதிரடியால் இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
கூடுதல் செய்திகளுக்கு: புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா? அவரது சாத்தியமான இலக்குகள் எது? வல்லுநர்களின் கணிப்பு
டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் அக்டோபர் 11ம் திகதி நடைபெறும் மூன்றாவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறுமோ, அந்த அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.