இனி இந்திய அணிக்கு விராட் கோலி தேவையில்லை - மாற்று வீரரை கைக்காட்டிய முன்னாள் வீரர்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அசத்திய இந்திய வீரர்களை முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் பாராட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 89, ஸ்ரேயாஸ் ஐயர் 57 ஓட்டங்களும் அடித்த நிலையில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் பங்கர் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக இந்திய அணியில் விராட் கோலி விளையாடாத போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து 3 ஆம் வரிசையில் இறக்கப்படுகிறார். ஒருவேளை காயத்தால் விராட் கோலி ஆட முடியாமல் போனால் சரியான மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் எனவும் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.