என் இடத்தை பிடிக்க வீரர்கள் இருக்காங்க! இப்போதைக்கு இதான் என்னோட இலக்கு... மனம் திறந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய அடுத்தக்கட்ட இலக்கு குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் இடம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்ததும் மிகப்பெரிய இரண்டு தொடர்களை அவர் சந்திக்க இருக்கிறார். ஒன்று ஐபிஎல் தொடர் அதனைத் தொடர்ந்து உலக கோப்பை டி20 தொடர் இந்த இரண்டு தொடர்களிலும் அவர் அணியில் முக்கிய வீரராக திகழ்வார்.
அவர் அளித்த பேட்டியில், காயத்திற்கு பிறகு நான் இப்போது திரும்பி வந்து ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை தொடர்களில் விளையாட உள்ளேன். இந்த இரண்டு மிகப்பெரிய தொடர்களும் ஒரு கிரிக்கெட்டராக எனக்கு மிகவும் முக்கியம். எப்போதுமே நாம் வெற்றி பெறும் அணியில் இருக்க வேண்டும் என்ற கனவு நம் அனைவரிடமும் இருக்கும்.
அந்த வகையில் தற்போது கடந்த நான்கு மாதங்களாக நான் என்னுடைய மனநிலையை ஒருநிலைப்படுத்தி கடினமாக உழைத்து வருகிறேன். அதேபோன்று என்னுடைய இடத்தை பிடிக்க வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் யாருடனும் என்னை ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை.
நிச்சயம் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை இனிவரும் தொடர்களில் கொண்டு வந்து நான் சார்ந்திருக்கும் அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும். இது மட்டுமே என்னுடைய தற்போதைய மன நிலையாக உள்ளது என கூறியுள்ளார்.