தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அபார சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர்! வெளியான வீடியோ
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸ் விளையாடும் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
தற்போது வரை இந்திய அணி 96 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்துள்ளது. தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி சதமடித்தார்.
அவர் 171 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடக்கமாகும்.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 145 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் ஸ்ரேயாஸ் அணியின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் இந்திய அணி மீண்டு வந்துள்ளது.
Shreyas Iyer becomes the 16th Indian batsmen to score ? on debut. Take a bow Shreyas Iyer ❤️#INDvNZ #ShreyasIyer #NZvINDpic.twitter.com/od4OXIPxoE
— CRICKET VIDEOS ? (@AbdullahNeaz) November 26, 2021