SRH விரைவாக சேஸ் செய்தது இன்னும் சிரிப்பை வரவழைக்கிறது: பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ்
அபிஷேக் ஷர்மாவின் ஆட்டம் தான் பார்த்த சிறந்ததில் ஒன்று என, பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டியுள்ளார்.
அபிஷேக் ஷர்மா 141
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் அணி நிர்ணயித்த 245 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சன்ரைசர்ஸ், 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி வென்றது.
அபிஷேக் ஷர்மா 55 பந்துகளில் 10 சிக்ஸர்களுடன் 141 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார். அவரது ஆட்டம் ரசிகர்கள், எதிரணி வீரர்கள் என பலரையும் வியக்க வைத்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டு
போட்டிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், "உண்மையைச் சொன்னால் இது ஒரு அற்புதமான ஸ்கோர் என்று நினைக்கிறேன். இரண்டு ஓவர்கள் மீதமுள்ள நிலையில் அவர்கள் அதை விரட்டியது இன்னும் எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
நாங்கள் சில கேட்சுகளை எடுத்திருக்கலாம், ஆனால் அபிஷேக் அதிர்ஷ்டசாலி. அவர் விதிவிலக்கானவர். சுருக்கமாக சொன்னால், நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பந்துவீசவில்லை.
நாங்கள் ட்ராவலிங் போர்டுக்கு சென்று சரிசெய்து கொள்ள வேண்டும். சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்கள் துடுப்பாட்டம் செய்த விதம் உலகிற்கு வெளியே இருந்தது. நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் அபிஷேக்கின் இன்னிங்ஸும் ஒன்றாகும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |