பஞ்சாபிற்கு முதல் தோல்வியை பரிசளித்த ராஜஸ்தான்: 223 ரன் இலக்கினை சூறையாடிய வீரர்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்டோய்னிஸ் வாணவேடிக்கை
நியூ சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் 2026 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 222 ஓட்டங்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 22 பந்துகளில் 62 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள்), ப்ரப்சிம்ரன் சிங் 59 (44) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசினார்.
ஜெய்ஸ்வால் விளாசல்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரியான் பராக் 29 (16) ஓட்டங்களில் வெளியேற, டொனோவன் பெரேய்ரா மற்றும் ஷுபம் தூபே வெற்றிக் கூட்டணி அமைத்தனர்.

டொனோவன் பெரேய்ரா (Donovan Ferreira) 26 பந்துகளில் 52 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்), ஷுபம் தூபே (Shubham Dubey) 12 பந்துகளில் 31 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவர்களில் 228 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த பஞ்சாப் அணிக்கு இது முதல் தோல்வி ஆகும்.
தோல்வி குறித்து ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "இது எங்களுக்கு சாதகமாக எதுவும் அமையாத அத்தகைய போட்டிகளில் ஒன்று மட்டுமே. இதை நாங்கள் ஒதுக்கிவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.
கடந்த காலத்தை எண்ணிப் பார்க்கையில் பல விடயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கக்கூடும் என்று தோன்றினாலும், நான் தொடர்ந்து நேர்மறையாகவே இருக்க விரும்புகிறேன். மேலும், எங்களின் அணுகுமுறையில் நம்பிக்கையுடன் செயல்படவே விரும்புகிறேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |