களத்திலேயே சக வீரரை ஆவேசமாக திட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்! வீடியோ
கொல்கத்தா அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது வெங்கடேஷ் ஐயரை ஆவேசமாக திட்டினார்.
மும்பையில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.
வழக்கமாக வெங்கடேஷ் ஐயர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார். ஆனால் இம்முறை அவருக்கு பதிலாக நரைன் களமிறக்கப்பட்டார். நரைன், பின்ச், ராணா, ரசல் ஆகியோரின் விக்கெட் வீழ்ச்சிக்கு பின் தான் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார், மறுமுனையில் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தார்.
கடைசி 25 பந்துகளில் 41 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, வெங்கடேஷ் ஐயர் deep cover திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். பந்து ஃபீல்டர் கையில் சென்றுவிட்டது என தெரிந்தும், அவர் 2வது ரன் ஓட ஷ்ரேயாஸை அழைத்தார். அதனை நம்பி ஸ்ரேயாஸும் பாதி பிட்ச்-க்கு வந்துவிட்டார்.
ஆனால் கடைசி நேரத்தில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் அங்கேயே நிற்க, தேவையின்றி டைவ் அடித்து ஸ்ரேயாஸ் தன்னை காப்பாற்றிக் கொண்டார். இதனால் கோபமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், களத்திலேயே வெங்கடேஷ் ஐயரை ஆவேசமாக திட்டினார். அதன் பின்னர் மளமளவென கொல்கத்தாவின் விக்கெட்டுகள் சரிந்ததால், அந்த அணி தோல்வியை தழுவியது.
— Addicric (@addicric) April 18, 2022