காயத்தினால் 7 கிலோ எடை குறைந்தேன்! முழு உடல் தகுதியுடன் ஸ்ரேயாஸ் ஐயர்: பஞ்சாப் அணிக்கு ஆறுதல்
விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்தால் 7 கிலோ எடை குறைந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
விலா எலும்பில் ஏற்பட்ட காயம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கு, அவுஸ்திரேலியாவில் விளையாடும் போது பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற போது விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் கிட்டத்தட்ட 3 மாதம் காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததோடு, காயம் காரணமாக 7 கிலோ வரை உடல் எடை குறைந்து இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு ஆறுதல்
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28ம் திகதி தொடங்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது முழு உடல் தகுதி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடுவது என்பது மிகவும் சவாலான காரியமாகும். விலா எலும்பில் ஏற்பட்ட அந்த தீவிரமான காயம் காரணமாக நான் 7 கிலோ வரை குறைந்தேன்.

நல்ல வேளையாக இரண்டு மாதங்கள் முன்பே நான் முழு உடல் தகுதி பெற்று விட்டேன், ஆனால் அந்த 7 கிலோ எடையை மீண்டும் அடைவதற்கு பெரும் முயற்சி தேவைப்பட்டது, நான் சவால்களை விரும்பி ஏற்பவன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |