ரூ 6 லட்சம் மதிப்பிலான கார், அலைபேசி இல்லை: ரூ 6300 கோடியை நன்கொடையாக வழங்கிய தமிழர்
உலக பெரும் கோடீஸ்வரர்கள் பலர் ஆடம்பர வாழ்க்கை முன்னெடுத்துவரும் காலகட்டத்தில், ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் ராம மூர்த்தி தியாகராஜன் விசித்திரமான நபராகவே அறியப்படுகிறார்.
மிக எளிமையான வாழ்க்கை
சுமார் 2.55 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கிய தமிழர் தற்போதும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ரூ 6 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றை பயன்படுத்திவரும் தியாகராஜன், பெரும்பாலும் அலைபேசி பயன்பாட்டை தவிர்க்கிறார்.
1960களில் ஸ்ரீராம் குழுமத்தை துவங்கியதில் இருந்து தியாகராஜனின் இந்த எளிமையான வாழ்க்கை துவங்கியது. சிறிய சிட் ஃபண்ட் நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம், தற்போது பெரும் நிதி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மட்டும் ரூ 2.03 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியுள்ளது. இது தவிர Shriram GI, Shriram Life, Shriram AMC, Shriram Capital, Shriram Fortune, Shriram Housing, மற்றும் Shriram Properties என பல நிறுவனங்கள் மக்கள் தேவையை அறிந்து செயல்பட்டு வருகிறது.
ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது ஆரம்ப அனுபவங்கள் தான், அவரது நிறுவனத்திற்கான அணுகுமுறையை வடிவமைத்துள்ளது. பெரும்பாலான வங்கிகள் சில குறிப்பிட்ட மக்களுக்கு சேவை வழங்க மறுப்பதை கவனித்துள்ளார்.
சுமார் 6,300 கோடி ரூபாய்
இதன் காரணமாகவே லொறி சாரதிகள், குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றை உருவாக்க முடிவு செய்தார். அவரது திட்டம் கைமேல் பலனளித்தது.
இதனால் அவரது நிறுவனம் விரைவாக விரிவடைந்தது. கோடிகள் சம்பாதித்தாலும், லட்சம் கோடி நிறுவனத்தை உருவாக்கியிருந்தாலும், தியாகராஜன் மிக எளிமையாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
இதன் உச்சகட்டமாக ஸ்ரீராம் குழுமத்தில் தமக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்து, சுமார் 6,300 கோடி ரூபாய் தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.
2006ல் உருவாக்கிய அறக்கட்டளை ஒன்று, ரூ 6,300 கோடி தொகையில் இருந்து ஸ்ரீராம் குழும ஊழியர்களுக்கு உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |