பிரிஸ்டல் நாய் தாக்குதல் சம்பவம்: 19 வயது பெண் கொடூர மரணம்
பிரித்தானியாவில் நாய் தாக்கியதில் 19 வயது பெண் மோர்கன் டோர்செட் உயிரிழந்துள்ளார்.
நாய் தாக்குதலில் 19 வயது பெண் பலி
பிரிஸ்டல்(Bristol) நகரில் நடந்த அதிர்ச்சிகரமான நாய் தாக்குதல் சம்பவத்தில், ஷிராப்ஷைர்(Shropshire) பகுதியைச் சேர்ந்த 19 வயது மோர்கன் டோர்செட்(Morgan Dorsett) என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை பிரிஸ்டல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
மோர்கன் டோர்செட் என்ற இளம் பெண் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது, ஒரு நாய் அவரை கொடூரமாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக, 20 வயதுடைய ஆண் மற்றும் பெண் இருவரை Avon மற்றும் Somerset காவல்துறை கைது செய்துள்ளது.
தீவிர விசாரணைக்குப் பிறகு, இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
XL புல்லி நாய் விவகாரம்
தாக்குதலில் ஈடுபட்ட நாய் XL புல்லி வகையைச் சேர்ந்தது என்று ஆரம்பத்தில் தகவல் வெளியானது.
இருப்பினும், அந்த நாயின் இனத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாய் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |