நோயுடன் போராடும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் PCOS என்னும் கருப்பை நீர்க்கட்டிகளை பிரச்சனையால் தான் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு PCOS பிரச்சினை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்
அவர் கூறியுள்ளதாவது, “என்னுடன் சேர்ந்து வொர்க் அவுட் செய்யுங்கள் . நான் தற்போது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸுடன் சில ஹார்மோனல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்.
சமநிலையின்மை மற்றும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் கூடிய சவாலான போராட்டம் ,ஆனால் நான் இதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இந்த இயற்கையான பிரச்சினையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன்.
எனது உடல் தற்போது சீராக இல்லை. ஆனாலும் நன்றாக சாப்பிட்டு , தூங்கி , உடற்பயிற்சி செய்ய முடிகிறது . அதற்காக நான் நன்றி சொல்கிறேன். எனது உடலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதனால் அந்த ஹார்மோனும் உடலில் பெருக்கெடுத்து ஓடட்டும்.
இது ஒரு பிரசங்கமாக தெரியலாம்! ஆனால் இந்த சவால் ஒரு பயணம் . அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது “ என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.