நோயுடன் போராடுவதால் மோசமான நிலையில் இருக்கிறேனா? நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்
தனது உடல்நிலை குறித்து வதந்திகள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரபல நடிகை ஸ்ருதிஹாசன்.
பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
சமீபத்தில் தனக்கு PCOS எனும் கருப்பை நீர்க்கட்டி உடலியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.
அத்துடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, இந்த இயற்கையான பிரச்சனையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டதாக கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்ருதிஹாசனின் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக செய்திகள் உலா வரத் தொடங்கின. சமூக வலைத்தளங்களில் இவ்வாறு தன்னை பற்றி வதந்திகள் வெளியாகி இருப்பதை அறிந்த அவர், தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ருதிஹாசன் கூறுகையில், 'நான் மோசமான நிலைமையில் இருப்பதாக பல வதந்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி இல்லை. நான் நலமாக தான் இருக்கிறேன். எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை' என தெரிவித்துள்ளார்.