மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்தது.. 8 வருடங்களாக நான் அதற்கு அடிமை- நடிகை ஸ்ருதி ஹாசன்
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது ஒரு நேர்காணலில், தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன்
தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் இசையமைப்பாளராக, பாடகியாக, நடிகையாக தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் டிசம்பர் 22-ம் திகதி பல மொழிகளில் வெளியாகவிருக்கும் ''சலார்'' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசன் ஹாலிவுட்டில் ''The Eye'' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன் தான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து மீண்டு வந்ததாக மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது..
''என் வாழ்நாளில் எட்டு ஆண்டுகளாக நான் மதுவிற்கு அடிமையாக இருந்தேன், அந்த நாட்களில் பார்ட்டிகளுக்கு சென்றால் அங்கு நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கடினமான இருக்கும்.
நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதை விரும்பினேன், ஆனால் போதைப்பொருளை ஒருபோதும் நான் பயன்படுத்தியது இல்லை. அந்த நாட்களில் மது என் வாழ்க்கையை ஆட்டிப்படைத்தது, பின் நான் அதிலிருந்து மீண்டுவிட்டேன்.
இப்பொழுது நான் அதைப்பற்றி வருத்தப்படுவதில்லை, அது என் வாழ்க்கையில் ஒரு கட்டம். பலரும் இதனைக் கடந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்" என வெளிப்படையாக பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |