அழகுக்காக அறுவை சிகிச்சையா? 36 வயது நடிகை விளக்கம்
சுருதிஹாசன் நடிப்பது மட்டுமன்றி, பல பாடல்களையும் பாடியுள்ளார்
சலார், வால்டயர் வீரய்யா ஆகிய தெலுங்கு படங்களில் சுருதிஹாசன் நடித்து வருகிறார்
நடிகை சுருதிஹாசன் தனது மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டது உண்மைதான் தான் என தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான சுருதிஹாசன் 30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்.
36 வயதாகும் சுருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. ஆனால் இதுகுறித்து சுருதிஹாசன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், 'நான் எனது மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டது உண்மைதான்.
எனது மூக்கில் ஒரு சமயத்தில் பலத்த அடிபட்டு விட்டது. இதற்காக நான் சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது எனது மூக்கை அழகாக மாற்ற வேண்டும் என்பதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்' என தெரிவித்துள்ளார்.