உலகக் கோப்பை தொடர் நிகழும் நேரத்தில் நாடு திரும்பிய இந்திய அணியின் முக்கிய வீரர்கள் - வெளியான காரணம்!
2024 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இவ்வேளையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் 3 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பிய இந்திய அணியின் முக்கிய வீரர்கள்
அமெரிக்காவில் தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் வருகிற புதன் கிழமை மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்கள் நாடு திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது.
சூப்பர் 8 சுற்றுகளில் இந்திய அணி பங்கேற்க உள்ள நிலையில், சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த முடிவானது ஏற்கனவே எடுக்கப்பட்டதாக BCCI தெரிவித்துள்ளது. சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் ரிசர்வ் வீரர்களாகவே அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தற்போதைய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், கேப்டன் ரோகித் சர்மா அல்லது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டால், ஏற்கெனவே உள்ள 15 பேர் கொண்ட அணியில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறக்கப்படுவார்கள் என BCCI தெரிவித்துள்ளது.
துடுப்பாட்டக்காரர்களான சுப்மன் கில், ரிங்கு சிங் ஆகியோரும், பந்து வீச்சாளர்களாக ஆவேஷ் கான் மற்றும் கலீல் அகமதும் இந்திய அணியிலி கூடுதலாக தேர்வு செய்யப்பட்டனர்.
சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் நாடு திரும்பியுள்ளனர். ஆனால் ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது அணியில் தற்போது வரை போட்டியில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |