விராட் கோஹ்லியின் இமாலய சாதனையை தூளாக நொறுக்கிய குஜராத் கேப்டன்
ஐபிஎல் தொடரில் 25 வயதிற்குள் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற விராட் கோஹ்லியின் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார்.
ஆட்டநாயகன்
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் சுப்மன் கில் (Shubman Gill) 55 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் விளாசினார்.
மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார். இது அவரது 12வது டி20 போட்டி ஆட்டநாயகன் விருது ஆகும்.
கோஹ்லியின் சாதனை முறியடிப்பு
இதன்மூலம் 25 வயதில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் எனும் கோஹ்லியின் சாதனையை முறியடித்தார்.
விராட் கோஹ்லி தனது 25 வயதில், 157 டி20 போட்டிகளில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார்.
ஆனால், சுப்மன் கில் (Shubman Gill) 153 போட்டிகளிலேயே 12 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று மிரட்டியுள்ளார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா (10), ரோஹித் ஷர்மா (9), அபிஷேக் ஷர்மா (9) ஆகியோர் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |