இலங்கை வீரர் தில்ஷனைப் போல் ஷாட் ஆட முயன்ற சுப்மன் கில்! பின்னர் அவருக்கு நடந்த ட்விஸ்ட்..வைரல் வீடியோ
தில்ஸ்ஸ்கூப் ஷாட் ஆடமுயன்று இந்திய வீரர் சுப்மன் கில் ஆட்டமிழந்த வீடியோ வைரலாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 312 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 49.4 ஓவர்களில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 49 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்ஷன் அவருக்கே உரித்தான ஷாட் ஒன்றை ஆடுவார். தான் எதிர்கொள்ளும் பந்தை தலைக்கு மேலே தூக்கிவிட்டு, விக்கெட் கீப்பரை தாண்டி சென்று பவுண்டரிக்கு செல்லும் வகையில் ஒரு ஷாட்டை அவர் விளையாடுவார்.
One of the most bizarre dismissals. pic.twitter.com/KOfWp52t9Q
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 24, 2022
இதனை புதிதாக முயற்சித்ததாலும், தனது துடுப்பாட்டத்தின்போது பலமுறை இந்த ஷாட்டை அவர் ஆடியதாலும் 'தில்ஸ்ஸ்கூப் ஷாட்' என கிரிக்கெட் உலகில் தில்ஷனின் ஷாட் அழைக்கப்படுகிறது.
சுப்மன் கில்லும் நேற்றைய போட்டியில் இந்த ஷாட்டை மேயர்ஸ் ஓவரில் ஆட முயன்றார். துரதிர்ஷ்டவசமாக பந்து அவரது பேட்டின் முன்பக்க விளிம்பில் பட்டு, பந்துவீச்சாளரிடமே எளிதான கேட்சாக சென்றது. இதனால் கில் மிகவும் ஏமாற்றமடைந்தார்.