சிக்ஸர் விளாசி இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்! ருத்ர தாண்டவத்தால் அதிர்ந்த மைதானம்
இந்திய வீரர் சுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார்.
ருத்ர தாண்டவ ஆட்டம்
ஐதராபாத்தில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்.
சதம் அடித்த பின்னர் அதிரடியில் இறங்கிய அவர் 182 ஓட்டங்களில் இருந்தபோது இரண்டு சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டார். 194 ஓட்டங்களில் இருந்த கில் எதிர்பாராத விதமாக ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை எட்டினார்.
@ICC (Twitter)
9 சிக்ஸர்கள் விளாசல்
அவரது ஆட்டத்தினால் அரங்கம் அதிர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய கில், 149 பந்துகளில் 208 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது சதத்தில் 9 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும்.
@ICC (Twitter)
A hat-trick of sixes to get to his double hundred ⭐
— ICC (@ICC) January 18, 2023
Shubman Gill becomes the fifth Indian player to get to an ODI double ton ?#INDvNZ | ?: https://t.co/raJtMjMaEn pic.twitter.com/UNSRQK11Rt