2023ல் இந்திய அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் யார் தெரியுமா?
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
ஷுப்மன் கில் சாதனை
இந்த ஆண்டு உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.
நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா இந்திய அணியின் ஷூப்மன் கில், அவுஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் என பல வீரர்கள் தங்கள் திறமைகளை இந்த ஆண்டு சிறப்பாக வெளிக்காட்டியுள்ளனர்.
அந்த வகையில், இந்தாண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை ஷூப்மன் கில் படைத்துள்ளார்.
ஷுப்மன் கில் இந்த ஆண்டு இந்திய அணிக்காக 3 பார்மெட்டுகளிலும் விளையாடி அசத்தியுள்ளார்.
அதே சமயம் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி இந்திய அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஷுப்மன் கில் இந்த ஆண்டு மட்டும் 52 போட்டிகளில் விளையாடி 2,154 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து விராட் கோலி 36 போட்டிகளில் விளையாடி 2, 048 ஓட்டங்கள் குவித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |