ரூ. 5.41 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சுப்மன் கில் ஜெர்சி! விலையில் பின்தங்கிய இங்கிலாந்து வீரர்கள்
லண்டனில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் ஜெர்சி சுமார் ரூ.5.41 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் 2-2 என்று சமனில் முடிந்துள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சுமார் 754 ஓட்டங்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
பல லட்சத்துக்கு ஏலம் போன சுப்மன் கில் ஜெர்சி
இந்நிலையில் Red for Ruth என்ற பெயரில் நடத்தப்பட்ட சிறப்பு ஏலத்தில் இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் ஜெர்சி அதிகபட்சமாக ரூ.5.41 லட்சத்திற்கு(GBP 4600) வாங்கப்பட்டுள்ளது.
இவரை தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் ஜெர்சிகள் ரூ.4.94 லட்சத்திற்கும்(GBP 4200), கே.எல் ராகுலின் ஜெர்சி ரூ.4.70 லட்சத்திற்கும்(GBP 4000) ரிஷப் பந்தின் ஜெர்சி ரூ.4 லட்சத்திற்கும்(GBP 3400) வாங்கப்பட்டுள்ளது.
விலையில் பின்தங்கிய இங்கிலாந்து வீரர்கள்
இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர்களில் அதிகபட்சமாக ஜோ ரூட்டின் ஜெர்சி ரூ.4.47 லட்சத்திற்கும்(GBP 3800), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜெர்சி ரூ.4 லட்சத்திற்கும்(GBP 3400) வாங்கப்பட்டுள்ளது.
இந்த விலைகள் பல இந்திய வீரர்களின் விலையை விட குறைந்த தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |