சர்வதேச டெஸ்டில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர்!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் முதல் சதத்தை விளாசினார்.
கில் முதல் சதம்
சட்டோகிராம் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி இன்று தொடங்கியது. தொடக்க வீரரும், கேப்டனுமான கே.எல்.ராகுல் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய புஜாரா, மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் சேர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரிகளுக்கு இடையே அவ்வப்போது சிக்ஸர்களையும் விளாசிய கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை எட்டினார்.
@AP
அவர் 152 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 ஆண்டுகள் கழித்து முதல் சதத்தை கில் அடித்துள்ளார்.
Maiden Test ? for Shubman Gill ?#BANvIND | #WTC23 | ? https://t.co/ym1utFYZ5S pic.twitter.com/2lCqKGQIEc
— ICC (@ICC) December 16, 2022
கில் - புஜாரா கூட்டணி 113 ஓட்டங்கள் எடுத்தது. கில் விக்கெட்டுக்கு பிறகு அதிரடி காட்டிய புஜாரா 19வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.
@AFP
வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு
இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ஓட்டங்கள் எடுத்திருத்தபோது டிக்ளேர் கொடுத்தது. இதன்மூலம் வங்கதேச அணிக்கு 513 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
What a hundred from Pujara ?#BANvIND | #WTC23 | ? https://t.co/ym1utFYZ5S pic.twitter.com/g0tOCz6Z3C
— ICC (@ICC) December 16, 2022
புஜாரா 102 ஓட்டங்களுடனும், கோலி 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.