லக்னோவிடம் படுதோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ்! மோசமான பேட்டிங் என ஒப்புக்கொண்ட சுப்மன் கில்
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 163 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் குவித்தார். பூரண் 22 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
Garda ukhad diya ?pic.twitter.com/RQzDliOuar
— Lucknow Super Giants (@LucknowIPL) April 7, 2024
அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 36 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால் அணித்தலைவர் கில் (19) ஆட்டமிழக்க குஜராத் அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.
கேன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும், சாய் சுதர்சன் 31 ஓட்டங்களில் வெளியேற, ஷரத் 2 ஓட்டங்களில் க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Captain Gill gave us a ???? start! ⚡#AavaDe | #GTKarshe | #TATAIPL2024 | #LSGvGT pic.twitter.com/FxYMiFPn91
— Gujarat Titans (@gujarat_titans) April 7, 2024
அதன் பின்னர் யாஷ் தாகூர் தனது மிரட்டலான பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் மொத்தமாக சரிந்து, 18.5 ஓவரில் 130 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. யாஷ் தாகூர் 5 விக்கெட்டுகளும், க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பிஸ்னோய் மற்றும் நவீன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தோல்வி குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணித்தலைவர் சுப்மன் கில் கூறுகையில், ''துடுப்பாட இது ஒரு நல்ல விக்கெட், எங்களின் மோசமான துடுப்பாட்ட செயல்திறன். நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றோம், ஆனால் நாங்கள் நடுவில் விக்கெட்டுகளை இழந்தோம், அதிலிருந்து மீள முடியவில்லை.
எங்கள் பந்துவீச்சாளர்கள் விதிவிலக்கானவர்கள், அவர்களை (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்) 160 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர். ஆனால், ஓரிரு ஓவர்களில் மாற்றக்கூடிய ஒரு வகையான வீரரான டேவிட் மில்லரை தவறவிட்டோம் (நேற்றையப் போட்டியில் மில்லர் ஆடவில்லை)'' என தெரிவித்தார்.
We will come back stronger.#TATAIPL2024 | #LSGvGT pic.twitter.com/8M17QppIlk
— Gujarat Titans (@gujarat_titans) April 7, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |