எனக்கு எந்த வருத்தமும் இல்லை; நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - மௌனம் கலைத்த சுப்மன் கில்
உலகக்கிண்ணத்தில் தொடரில் விளையாட இடம் கிடைக்காதது குறித்து சுப்மன் கில் மனம் திறந்துள்ளார்.
சுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் (Shubman Gill) டி20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவில்லை.
இதுகுறித்து எந்த கருத்தும் அவர் கூறாமல் இருந்த நிலையில் தற்போது மௌனம் கலைத்துள்ளார்.
அணியில் இடம்பெறாததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
நாங்களே கைப்பற்றுவோம்
மேலும் அவர் கூறுகையில், "கடந்த 3-4 சீஸன்களாக ஐபிஎல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறேன். நான் யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த முறை ஐபிஎல் கிண்ணத்தை நாங்களே (குஜராத் டைட்டன்ஸ்) கைப்பற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் இதுவரை 118 ஐபிஎல் போட்டிகளில் 3,866 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |