வெளியேறிய ரோகித், சதம் விளாசிய இளம் வீரர்!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சதம் விளாசினார்.
ரோகித் சர்மா அவுட்
அகமதாபாத்தில் நடந்து வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி துடுப்பாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 35 ஓட்டங்களில் குணெமன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் சுப்மன் மற்றும் சேடீஸ்வர் புஜாரா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 187 ஆக உயர்ந்தபோது புஜாரா 42 ஓட்டங்களில் வெளியேறினார்.
சுப்மன் கில்
இரண்டாவது சதம் இவர்களது கூட்டணி 103 ஓட்டங்கள் குவித்தது. எனினும் நிலைத்து நின்று ஆடிய கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
@BCCI
அவர் 235 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 128 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போது வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கோலி 38 ஓட்டங்களுடனும், ஜடேஜா 3 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.
@BCCI
@BCCI
@BCCI