நான் நினைத்த மாதிரி 2023ல் இல்லை: இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் உருக்கம்
நான் நினைத்ததைப் போல் 2023ம் ஆண்டு அமையவில்லை என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஷுப்மன் கில் உருக்கம்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த நட்சத்திரமாக ஷுப்மன் கில் வளர்ந்து வருகிறார். இவர் டெஸ்ட், ஒருநாள், டி20 என இந்திய அணிக்காக மூன்று பார்மெட்டுகளிலும் விளையாடி அசத்தி வருகிறார்.
இந்நிலையில் 2023ம் ஆண்டு தனக்கு எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஷூப்மன் கில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், நான் நினைத்தது போல 2023 எனக்கு அமையவில்லை, ஆனால் கடினமான உழைப்பினை செலுத்தி வெற்றி இலக்கிற்கு மிக அருகில் வரை சென்றோம் என்பதில் பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் 2023ல் இலக்காக தான் வைத்து இருந்த விஷயங்களையும் இணையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |