போட்டிகள் மழையால் ரத்தாவது எரிச்சலாக உள்ளது! இந்திய அணியின் இளம் வீரர்
கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்படுவது எரிச்சலாக உள்ளதாக இந்திய அணி வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
மழையால் ரத்தான போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செட்டொன் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் இந்திய அணி துடுப்பாடியபோது மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 45 ஓட்டங்களுடனும், சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்களுடனும் எடுத்திருந்தனர்.
@AP
சுப்மன் கில் யோசனை
அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த இளம் வீரர் சுப்மன் கில், 'ஒரு வீரராகவும், ரசிகராகவும் பல போட்டிகள் மழையால் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது உள்ளேயும், வெளியேயும் எரிச்சலூட்டுகிறது. எனவே, உட்புற அரங்கங்களில் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
ஆனால் இது ஒரு பெரிய முடிவு என்பதால் நான் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. வெளிப்படையாக மூடிய கூரை (விளையாட்டு மைதானங்கள்) நன்றாக இருக்கும். இது வாரியங்களால் எடுக்கப்படும் முடிவு. இந்த போட்டி (இரண்டாவது ஒருநாள் போட்டி) மிகவும் வெறுப்பாக இருந்தது. எத்தனை ஓவர்கள் என்று உங்களுக்கு தெரியாது, அதனால் உங்கள் இன்னிங்க்ஸை திட்டமிட முடியாது' என தெரிவித்துள்ளார்.