நெட்ப்ளிக்ஸ் தொடருக்காக மகாராணியார் உயிருடன் இருந்தபோதே அவருக்கு தெரியாமல் ஹரி மேகன் செய்த அத்துமீறல்
தங்கள் தனியுரிமையை யாரும் மீறக்கூடாது என மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்த ஹரி மேகன் தம்பதியர், தங்கள் நெட்ப்ளிக்ஸ் தொடருக்காக, மகாராணியாருக்குத் தெரியாமல் செய்த அத்துமீறல் ஒன்று தெரியவந்துள்ளது.
தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த ஹரி மேகன் தம்பதியர்
ஒரு அமெரிக்க நடிகையாக ஆடை விடயங்களில் அலட்சியமாக இருந்த மேகன், ஹரியைத் திருமணம் செய்து ராஜ குடும்பத்துக்குள் வந்தபோது, தாங்கள் எப்படி உடை அணிவது என்பதுபோன்ற விடயங்களுக்குக் கூட ராஜ குடும்பத்தில் கட்டுப்பாடுகள் உள்ளதை அறிந்தபோது அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்தார்.
அரைகுறை உடையுடன் அவர் நடித்த புகைப்படங்கள் எல்லாம் ஊடகங்களில் வெளியான நிலையில், தங்கள் தனிப்பட்ட விடயங்களில் மற்றவர்கள் தலையிடக்கூடாது என அவர் கூறிய விடயங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை.
image: Tim Graham Photo Library via Getty Images
மகாராணியாரின் தனியுரிமையில் அத்துமீறல்
இப்படி தங்கள் தனியுரிமையில் யாரும் அத்துமீறக்கூடாது என வலியுறுத்தும் ஹரி மேகன் தம்பதியர் மகாராணியாரின் தனியுரிமையை மீறியுள்ளது தெரியவந்துள்ளது.
அதுவும், மகாராணியார் உயிருடன் இருக்கும்போதே, அவர் பதவியில் இருக்கும்போதே, அவருக்குத் தெரியாமல் இந்த விடயத்தை அவர்கள் செய்துள்ளார்கள்.
இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த நெட்ப்ளிக்ஸ் தொடருக்காக நீண்டகாலமாகவே ஹரியும் மேகனும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
என்ன அத்துமீறல்?
ஹரி மேகன் நெட்ப்ளிக்ஸ் தொடரின் ஒரு காட்சியில் அவர்கள் இருவரும் ஒரு சிறிய அறையில் தேநீர் அருந்தும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த இடம் மகாராணியார் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் ஒரு இடம் ஆகும். அதாவது, சிறுபிள்ளையாக இருக்கும்போது மகாராணியார் விளையாடிய ஒரு இடம் அது. இப்போது அந்த இடம் இளவரசர் ஆண்ட்ரூவின் வீடு அமைந்திருக்கும் பகுதிக்குள் உள்ளது.
அப்படி மகாராணியாரின் தனிப்பட்ட ஒரு இடத்தை ஹரியும் மேகனும் தங்கள் நெட்ப்ளிக்ஸ் தொடருக்காக பயன்படுத்தியிருப்பது உண்மையானால், அது தனியுரிமை அத்துமீறல் என்கிறார் ரஜ குடும்ப நிபுணரான Daniela Elser.
image: Tim Graham Photo Library via Getty Images