820 ஓட்டங்கள் குவித்த அணி! 180 ஆண்டுகால சாதனை முறியடிப்பு..305 ரன் விளாசிய வீரர்

England Cricket Team Sam Curran
By Sivaraj Jul 01, 2025 06:51 AM GMT
Report

கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடரில் சர்ரே 820 ஓட்டங்கள் குவித்து புதிய வரலாறு படைத்தது. 

டொமினிக் சிப்லே, சாம் கர்ரன் ருத்ர தாண்டவம்

லண்டன் ஓவல் மைதானத்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் (County Division One 2025) போட்டியில், சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் விளையாடி வருகின்றன.

 

புயல்வேகத்தில் ஹெல்மெட்டை தாக்கிய பந்து: வெளியேறிய வீரருக்கு லேசான மூளையதிர்ச்சி

புயல்வேகத்தில் ஹெல்மெட்டை தாக்கிய பந்து: வெளியேறிய வீரருக்கு லேசான மூளையதிர்ச்சி

நாணய சுழற்சியில் வென்ற டர்ஹாம் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, சர்ரே அணி முதலில் துடுப்பாடியது.

அணித்தலைவர் ரோர்ரி பர்ன்ஸ் 55 (74) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, ரியான் படேல் 10 ஓட்டங்களில் வெளியேறினார்.Rory Burns 

அதன் பின்னர் கைகோர்த்த டொமினிக் சிப்லே மற்றும் சாம் கர்ரன் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது.

டேன் லாரன்ஸ் சரவெடி ஆட்டம்

அதிரடி சதம் விளாசிய சாம் கர்ரன் (Sam Curran) 124 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். Sam Curran 

மறுமுனையில் நிதான சதம் விளாசிய சிப்லே, டேன் லாரன்ஸ் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

டேன் லாரன்ஸ் (Dan Lawrence) டர்ஹாம் பந்துவீச்சை சூறையாடி 149 பந்துகளில் 178 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும். 

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் - முன்னாள் பயிற்சியாளர் காட்டம்

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் - முன்னாள் பயிற்சியாளர் காட்டம்

 

சிப்லே முச்சதம்

ரன் வேட்டை நடத்திய டாமினிக் சிப்லே (Dominic Sibley), இரட்டை சதத்தை கடந்து முச்சதம் விளாசினார். அவர் 2 சிக்ஸர், 29 பவுண்டரிகளுடன் 305 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார். Dominic Sibley 

வில் ஜேக்ஸ் தனது பங்குக்கு 94 பந்துகளில் 119 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் அணியின் ஸ்கோர் 820 ஆக உயர, அணித்தலைவர் பர்ன்ஸ் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

சர்ரே (Surrey) அணி 820 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் 180 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.

1899ஆம் ஆண்டில் சோமர்செட் அணிக்கு எதிராக சர்ரே அணி 811 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

Surrey 820/9

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US