கனடாவில் வீடு தோறும் சென்று நிதி திரட்டிய நபர்... புகைப்படம் வெளியிட்டு எச்சரித்த பொலிசார்
கனடாவின் ரொறன்ரோவில் SickKids என்ற அமைப்பின் சார்பில் வீடு தோறும் நிதி திரட்டிய நபர் போலி என்றும், அவரை அடையாளம் காண உதவ வலியுறுத்தியும் பொலிசார் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
SickKids அமைப்பின் சார்பாக
ரொறன்ரோ பொலிஸ் சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 2023 நவம்பர் மாதத்தில் இருந்தே தொடர்புடைய நபர் SickKids அமைப்பின் சார்பாக நிதி திரட்டுவதாக கூறி ரொறன்ரோவில் பல வீடுகளுக்கு சென்றுள்ளார்.
Credit: TPS
மட்டுமின்றி, உண்மையான SickKids அமைப்பின் உறுப்பினர் போன்று அவர் உடை அணிந்து, அடையாள அட்டையுடன் காணப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய அமைப்பின் சார்பில் நிதி கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த நபர் உண்மையில் SickKids அமைப்பினை சார்ந்தவர் அல்லர் என்றும், அவர் போலி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் இது தொடர்பில் எச்சர்க்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் தற்போது புகைப்படம் வெளியிட்டு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் காண நேர்ந்தால்
அந்த நபர் இனி ஏதேனும் குடியிருப்புகளில் அல்லது பொதுமக்கள் அந்த நபரை எங்கேனும் அடையாளம் காண நேர்ந்தால், அவரினை அணுகாமல் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும் கோரியுள்ளனர்.
Credit: ctvnews
SickKids அமைப்பானது நிதியுதவி கோரி பொதுமக்களை நாடவில்லை என்றும், குடியிருப்புகளுக்கு உறுப்பினர்களை அனுப்பவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |