கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள் இதோ!
corona
siddha medical
By Kishanthini
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் பாரம்பரிய சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றி வருகின்றது.
நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு எந்த மாதிரியான முன்னேச்சரிக்கை மற்றும் சித்த மருத்துவ முறைகளை கையாளலாம் என்று இங்கு பார்ப்போம்.
முன்னெச்சரிக்கை
-
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின் சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.
தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும்.
- வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும்.
மஞ்சள், வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம்.
- காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.
தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும்.
- இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.
சித்த மருத்துவம்
- அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
- கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.
நீராவி பிடிக்கலமா?
- காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம்பெற முடியும்.
- கல் உப்பு, விரலி மஞ்சள்தூள், வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும்.
- அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US