மலச்சிக்கலை குணமாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்! இதோ உங்களுக்காக
constipation
By Kishanthini
இன்றைய காலத்தில் பலர் மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அயல் நாட்டு உணவுகளை உண்பது, பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது, தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு .
இதனை போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடுவதை தவிர்த்து ஒரு சில எளிய வழிகளை கொண்டு சரி செய்ய முடியும்.
அந்தவகையில் மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அரிய குறிப்புகளை பார்ப்போம்.
- மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.
- மலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.
- மலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.
- குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.
- கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US