அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகர் சித்தார்த்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அயலான்
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமாரின் இரண்டாவது படமாக அயலான் தயாராகியுள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கோல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி பாபு, பால சரவணன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.
அயலானில் வரும் ஏலியன் கதாபாத்திரத்துக்கு பலருடைய குரல்களை பரிசீலித்து கடைசியில் சித்தார்த்தை வைத்து டப்பிங் பேச வைத்தனர்.
நடிகர் சித்தார்த்
மூன்று தினங்கள் சித்தார்த் டப்பிங் பேசினார். அதில் ஒருநாள், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்று பெப்சி தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதால் சிறப்பு அனுமதி பெற்று டப்பிங் செய்தனர். சித்தார்த்தின் இந்த உதவியை கேஜேஆர் ஸ்டுடியோஸ் பாராட்டியுள்ளது.
''உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியன எங்கள் அயலானை மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும் மாற்றியுள்ளது. நாங்கள் விரும்பியதைப் போலவே பார்வையாளர்களும் உங்கள் பணியை மெச்சுவார்கள் என்று நம்புகிறோம்'' என அவர்களின் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ''மிகவும் விருப்பத்துடனும், அன்புடனும் அயலானுக்குக் குரல் கொடுத்து படத்துடன் இணைந்தமைக்கு மனம் நிறைந்த நன்றி சித்தார்த் சார'' என படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமாரும் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாள் டப்பிங் பேசித் தருவதற்கு சித்தார்த் பணம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.
பெருந்தொகையை சம்பளமாகத்தர தயாரிப்பாளர்கள் முன்வந்தும் அவர் அதனை வாங்க மறுத்துள்ளார். எனவே படக்குழு அவரை மனதாரா பாராட்டி நன்றி தெரிவித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |