அந்த இடத்தில் ட்ரை ஷேவிங்(Dry Shaving) மட்டும் செஞ்சிடாதீங்க
வெளிப்புற அழகுக்கு முக்கியத்துவம் தருவதை காட்டிலும் உடல் உள்ளுறுப்புகளையும், அந்தரங்க பகுதியையும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுவே தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும், மிக முக்கியமாக பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஒரு சில பெண்கள் தனது அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்குவதற்கு அவ்வப்போது ட்ரிம் செய்வார்கள் அல்லது முழுவதுமாக நீக்குவார்கள்.
இதை செய்வதற்கு ரேசர் அல்லது டிரிம்மர் பயன்படுத்துவார்கள். இதை பயன்படுத்தும் போது தண்ணீர், ஷேவிங் க்ரீம், ஜெல் அல்லது வேறு ஏதேனும் ஈரப்பதமான பொருளை பயன்படுத்தி முடியை நீக்க வேண்டும்.
இதை தவிர்த்து சாதாரணமாக ஈரப்பதம் இல்லாமல் முடியை நீக்கினால் அது அந்தரங்க பகுதியை முற்றுமாக பாதிக்கும்.
ஆகவே ஈரப்பதம் இல்லாமல் ரேசர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- சரும அரிச்சல், பிறப்புறுப்புப் பகுதியில் அதிகரிக்கும் மேலும் சருமம் சிவந்து போகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
- இந்த பகுதியில் ஈரப்பதம் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். இது குறைந்து விட்டால் பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் சருமம் கூடுதலாக வறட்சி அடையும். வறண்ட சருமம் அரிப்பை அதிகரித்து, சரும பிரச்சனையை அதிகரிக்கும்.
- இந்தப் பகுதியில் காயம் ஏற்பட்டால் வீக்கம், புண், ரேஷஸ் போன்றவற்றை உண்டாகலாம்.
- ரேசர் பயன்படுத்தினால் உண்டாக்கும் உராய்வு சருமத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, நீண்ட நாட்களுக்கு காயம் ஆறாமல் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |